search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் விளக்கம்"

    • அரசு போக்குவரத்து கழக அதிகா ரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர்.
    • பொதுமக்களின் ஆக்கிர மிப்புகளே காரணம் என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகர பேருந்து நிலையத்திலிருந்து ஏ.கொல்லஅள்ளி வழியாக புதூர், சந்தனூர், த.குளியனூர், ப.குளியனூர்,

    பருத்திநத்தம், உத்தனூர் வழியாக முக்க ல்நாயக்கன்பட்டி வரை இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீரென நிறுத்தப்பட்டு விட்டதாக கூறியும், மீண்டும் அந்த வழித்தடத்தில் பேருந்து இயக்க வலியுறு த்தி போராட்டம் நடக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு போஸ்டர்கள் ஒட்டப்ப ட்டிருந்தன.

    இந்நிலையில் இந்த பேருந்து வசதி நிறுத்தப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    மேலும் பஸ் வசதி இல்லாததால் இப்பகுதி மக்கள் ஆட்டோக்களையே பயணத்துக்கு நம்பி உள்ளனர்.

    இதற்காக ஆட்டோ டிரைவர்கள் ஒரு நபருக்கு ரூ.20 வசூலிப்பதாக கூறினர்.

    இது குறித்து மாலை மலரில் விரிவான செய்தி வெளியானது. இதை தொடர்ந்து அரசு போக்குவரத்து கழக அதிகா ரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளனர்.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    குறிப்பிட்ட அந்த வழித்தடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டு சுமார் பத்து வருடங்களுக்கு மேலாகிறது.

    அந்த வழித்தடத்தில் சாலை விநாயகர் கோவில் ரோட்டிலிருந்து சாய்பாபா கோவிலுக்கு திரும்பும் வளைவு மிக குறுகலானது.

    மேலும் அந்த பாதையில் சாலையோர திறந்த வெளி கிணறுகளும் உள்ளன.அவற்றில் இருசக்கர வாகனங்களில் சென்று தடுமாறி விழுந்ததில் சிலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அத்துடன் முன்பு இருந்ததை விட தற்போது அந்த சாலை மிகவும் குறுகலாகி விட்டது. பொதுமக்களின் ஆக்கிர மிப்புகளே காரணம் என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

    மேலும் இந்த சாலையில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்கப்ப டுவதாக கூறப்பட்டாலும், பயணிகள் பேருந்தை இந்த சாலையில் இயக்கி விபரீதம் ஏற்படுவதை ஏற்க முடியாது.

    இருப்பினும் பொதுமக்க ளின் கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.

    அவர்கள் அந்த வழித்தடத்தை ஆய்வு செய்து பேருந்து இயக்க வைப்பு இருந்தால் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×